வியாழன், 29 ஏப்ரல், 2010

நாகை மாவட்டத்தின் பெருமை மிக்க இடங்கள்


திருக்கடையூர்: தரங்கம்பாடி - ஆக்கூர் சாலையில் உள்ள திருக்கடையூர் அபிராமி அம்மன் திருக்கோயில் பெரும்புகழ்பெற்றது.

அபிராமி பட்டரால், அபிராமி அந்தாதி பாடப்பெற்ற பெருமை பெற்றது, இத்தலம். ஆயுள் அபிவிருத்தி பெறவும், நோய் குணமாகவும் இங்கு வேண்டுகின்றனர்.

இத்தலத்தில் உக்ரரத சாந்தி (59), சஷ்டியப்தபூர்த்தி (60), பீமரத சாந்தி (70), சதாபிஷேகம் (80), கனகாபிஷேகம் (90), பூர்ணாபிஷேகம் / மகாபிஷேகம் (100) ஆகிய விழாக்களைக் கொண்டாடுகின்றனர்.

தரங்கம்பாடி: கி.பி. 1620-ம் ஆண்டில் டச்சுக்காரர்களால் கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை தரங்கம்பாடியில் உள்ளது.

தமிழ்நாடு தொல்லியல்துறையினர் பராமரிப்பில் உள்ள இக்கோட்டையில் நாட்டின் முதல் அச்சகம், அரிய ஓலைச்சுவடிகள், புகைப்படங்கள், படைக்கலன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கி.பி. 1701 - ல் கட்டப்பட்ட ஜியோன் தேவாலயம், 1792 - ல் கட்டப்பட்ட நுழைவாயில், கி.பி. 1305 - ல் கட்டப்பட்ட மாசிலாமணிநாதர் ஆலயம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை.

பூம்புகார்: சோழர் காலத்தில் துறைமுகமாக வழங்கிய பூம்புகார், வங்கக் கடலோரம் அமைந்துள்ளது. சிலப்பதிகாரக் காட்சிகளைக் கொண்ட எழுநிலை மாடத்தைக் கொண்ட கலைக்கூடம், இழஞ்சி மன்றம், பாவை மன்றம், நெடுங்கல் மன்றம், கொற்றப்பந்தல் ஆகியவை 1973 - ம் ஆண்டில் கட்டப்பட்டு காட்சிக்கு உள்ளன.

பூம்புகாரைச் சுற்றிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி மூலம் எடுக்கப்பட்ட பொருள்கள் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு உள்ளன.
ஆண்டு தோறும் சித்திரைப் பெüர்ணமியன்று பூம்புகாரில் நடைபெறும் இந்திர விழா சிறப்பானது

வந்து சேர: மயிலாடுதுறையிலிருந்து 25 கி.மீ. தூரத்திலும், சீர்காழியிலிருந்து 21 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ள பூம்புகாருக்கு பேருந்து வசதி உண்டு.

தங்குமிடம்: பூம்புகாரில் தங்குவதற்கு பயணியர் விடுதியும், சிப்பி வடிவிலான குடில்களும், ஒரு சங்கு வடிவக் குடிலும் உள்ளன. வாடகை ரூ. 50 முதல் ரூ. 175 வரை.

தொலைபேசி எண்: 04364-260439

சிக்கல்: நாகையிலிருந்து தஞ்சை சாலையில் 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் கோயில்.

சீகன் பால்க்சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg ஜூலை 10, 1682 - பெப்ரவரி 23, 1719) என்பவர் ஜெர்மனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரி. தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது என்பது சிறப்புக்குரிய ஒரு செய்தியாகும். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. [1]

பொருளடக்கம் [மறை]
1 வாழ்க்கைச் சுருக்கம்
2 மத போதகர்
3 இவர் எழுதிய புத்தகங்களில் சில
4 குறிப்புகள்
5 வெளி இணைப்புகள்

[தொகு] வாழ்க்கைச் சுருக்கம்
ஜெர்மனியில் புல்ஸ்நிட்ஸ் (Pulsnitz) என்ற சிற்றூரில் ஒரு வணிகக் குடும்பத்தில் கடைசி மகனாகப் பிறந்தவர். ஜெர்மனியின் ஹாலா-விட்டன்பேர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார்.

[தொகு] மத போதகர்
இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புமாறு டென்மார்க்கின் நான்காம் பிரெடெரிக் மன்னனின் அழைப்பை ஏற்று சீகன்பால்க் மற்றும் ஹைண்ட்ரிக் புளூட்சோ இருவருமாக ஜூலை 9, 1706 ஆம் ஆண்டில் தரங்கம்பாடியை அடைந்தனர்.

இவர் தொடக்ககாலத்தில் தமிழில் நூற்கள் அச்சிட பல வகைகளில் பங்களித்தார்.
[தொகு] இவர் எழுதிய புத்தகங்களில் சில
Grammatica Damulica (Tamil Grammer) தமிழகம் வர இருந்த ஜெர்மன் பாதிரிகள் இலத்தீன் மொழி வாயிலாக தமிழை இலகுவாகக் கற்பதற்காக எழுதியது
BIbliotheca Malabarica

புதன், 28 ஏப்ரல், 2010

TRANQUEBAR

 • தல வரலாறு

  இன்று இவ்வூர் "தரங்கம்பாடி" என்று வழங்குகிறது.


  அளம் என்பது உப்பளத்தைக் குறிக்கும். இக்கோயிலுக்குப் பல உப்பளங்கள் சொந்தமாக இருந்தன. அதனால் வந்த பெயர் அளப்பூர் ஆகும்.

  சிறப்புக்கள்

  இத்தலம் அப்பர், சுந்தரர் ஆகியோர்களின் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.


  வரலாற்றுச் சிறப்புடைய தலம்.


  டேனிஷ்காரர் ஆட்சி புரிந்த இடம்; கடலோரத்தில் டேனிஷ் கோட்டையும் அருங்காட்சியகமும் உள்ளன.


  ஒரு காலத்தில் இவ்வூர் துறைமுகமாக இருந்ததை நினைவூட்டும் வகையில் ஓரிரு சுவர்கள் மட்டும் கடலில் நின்று காட்சி தருகின்றன.


  குல சேகர பாண்டிய மன்னன் சிறந்த சிவபக்தன். இவன் தன் 38வது ஆட்சியாண்டில் கி.பி. 1306ல் இவ்வூரைத் தோற்றுவித்துக் கோயிலையும் கட்டினான். வேதத்தின் ஆறு அங்கங்களுக்கும் மூலம் இறைவனே யாதலின் இவ்வூருக்கு (ஷட் - அங்கன் பாடி) "சடங்கன்பாடி" என்று பெயர் வைத்தான். சுவாமிக்கு மணிவண்ணீசுவரமுடையார் என்று திருநாமஞ் சூட்டினான். கடற்கரையை யொட்டிய நகர மாதலாலும், தோற்றுவித்தவன் குலசேகரபாண்டியன் என்பதாலும் இவ்வூருக்குக் குலசேகரன் பட்டினம் என்ற பெயரும் வழங்கலாயிற்று.


  கி.பி. 1354ல் ஆண்ட வீர பாண்டியன் ஆட்சிக் காலத்திலும் இப்பெயர்களே வழங்கி வந்தன.


  இசுலாமியர்களால் தென்னிந்தியா தாக்கப்பட்ட பின்னர், விஜய நகர மன்னர்கள் தென்னிந்தியாவைக் காத்து ஆண்டனர். அக்காலத்தில் தஞ்சையிலிருந்து கி.பி. 1567ல் ஆட்சி செய்த அச்சுத்தப்ப நாய்க்க மன்னர் காலத்தில் ஊர்ப்பெயர் சடங்கண்பாடி என்றிருந்த போதிலும், சுவாமி பெயர் மாசிலாமணீஸ்வரர் என்று மாறியுள்ளது.


  ஆங்கிலேயர்களால் ஷடங்கன் பாடி - சடங்கன்பாடி என்ற பெயர்களை சரியாக உச்சரிக்க வராமற் போகவே, தரங்கம்பாடி என்று பெயர் மாறி என்றானது. (தரங்கம் - அலை. அலைகள் சூழ்ந்த நகரம் - தரங்கம்பாடி).


  கோயிலின் முன் மண்டபத்திற்கு சுமார் 25 அடியில் கொடிமரம் இருந்திருக்க வேண்டும். கடலில் மீன் பிடிப்பவர்கள் கடலில் 150 அடிக்குள் சுவர்கள் இருப்பதாக கூறுகின்றனர்.

  இறையன்பர்களின் கவனத்திற்கு :-

  கடல் அலைகள் மோதுவதனால் கோயிலின் முற்பகுதி முழுவதும் அழிந்து விட்டது. கற்களெல்லாம் கடல் நீரில் வீழ்ந்து கிடக்கின்றன. இக்கற்களின் மீது ஏறிச் சென்றே - கடல் நோக்கி வீற்றிருக்கும் பெருமானைத் தரிசிக்க வேண்டியிருக்கிறது.


  மூலவரும், விநாயகரும் மட்டுமே கோயிலில் உள்ளனர். மூர்த்தங்கள் எல்லாம் - அகிலாண்டேஸ்வரி, பாலசுப்பிரமணியர், சண்டேசுவரர், துர்க்கை, மகாலட்சுமி, நவக் கிரகங்கள் - கோயிலுக்குப்பக்கத்தில் ஓரிடத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுப் பூசைகள் நடைபெற்று வருகின்றன.


  கோயில் முற்பகுதி முழுவதும் கடல் அலைகள் மோதி அழிந்து போயிருக்க, பிற்பகுதி ஓரளவு காப்பாற்றப்பட்டுள்ளது. 1954ல் அம்பாள் விமானத்தை இடம் மாற்றி, சுவாமிக்குப் பக்கத்தில் தனியே கட்டி, காப்பாற்றியுள்ளனர்.


  இக்கோயிலுக்கு விரைவில் திருப்பணி செய்யவேண்டியது சைவர்களின் கடமையாகும்.

  அமைவிடம்
  மாநிலம் : தமிழ் நாடு
  திருக்கடையூரிலிருந்து தென்கிழக்கே 8 கி. மீ. தொலைவு. நாகப்பட்டினத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. தரங்கம்பாடியில் புகை வண்டி நிலையம் உள்ளது.