வியாழன், 29 ஏப்ரல், 2010

நாகை மாவட்டத்தின் பெருமை மிக்க இடங்கள்


திருக்கடையூர்: தரங்கம்பாடி - ஆக்கூர் சாலையில் உள்ள திருக்கடையூர் அபிராமி அம்மன் திருக்கோயில் பெரும்புகழ்பெற்றது.

அபிராமி பட்டரால், அபிராமி அந்தாதி பாடப்பெற்ற பெருமை பெற்றது, இத்தலம். ஆயுள் அபிவிருத்தி பெறவும், நோய் குணமாகவும் இங்கு வேண்டுகின்றனர்.

இத்தலத்தில் உக்ரரத சாந்தி (59), சஷ்டியப்தபூர்த்தி (60), பீமரத சாந்தி (70), சதாபிஷேகம் (80), கனகாபிஷேகம் (90), பூர்ணாபிஷேகம் / மகாபிஷேகம் (100) ஆகிய விழாக்களைக் கொண்டாடுகின்றனர்.

தரங்கம்பாடி: கி.பி. 1620-ம் ஆண்டில் டச்சுக்காரர்களால் கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை தரங்கம்பாடியில் உள்ளது.

தமிழ்நாடு தொல்லியல்துறையினர் பராமரிப்பில் உள்ள இக்கோட்டையில் நாட்டின் முதல் அச்சகம், அரிய ஓலைச்சுவடிகள், புகைப்படங்கள், படைக்கலன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கி.பி. 1701 - ல் கட்டப்பட்ட ஜியோன் தேவாலயம், 1792 - ல் கட்டப்பட்ட நுழைவாயில், கி.பி. 1305 - ல் கட்டப்பட்ட மாசிலாமணிநாதர் ஆலயம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை.

பூம்புகார்: சோழர் காலத்தில் துறைமுகமாக வழங்கிய பூம்புகார், வங்கக் கடலோரம் அமைந்துள்ளது. சிலப்பதிகாரக் காட்சிகளைக் கொண்ட எழுநிலை மாடத்தைக் கொண்ட கலைக்கூடம், இழஞ்சி மன்றம், பாவை மன்றம், நெடுங்கல் மன்றம், கொற்றப்பந்தல் ஆகியவை 1973 - ம் ஆண்டில் கட்டப்பட்டு காட்சிக்கு உள்ளன.

பூம்புகாரைச் சுற்றிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி மூலம் எடுக்கப்பட்ட பொருள்கள் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு உள்ளன.
ஆண்டு தோறும் சித்திரைப் பெüர்ணமியன்று பூம்புகாரில் நடைபெறும் இந்திர விழா சிறப்பானது

வந்து சேர: மயிலாடுதுறையிலிருந்து 25 கி.மீ. தூரத்திலும், சீர்காழியிலிருந்து 21 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ள பூம்புகாருக்கு பேருந்து வசதி உண்டு.

தங்குமிடம்: பூம்புகாரில் தங்குவதற்கு பயணியர் விடுதியும், சிப்பி வடிவிலான குடில்களும், ஒரு சங்கு வடிவக் குடிலும் உள்ளன. வாடகை ரூ. 50 முதல் ரூ. 175 வரை.

தொலைபேசி எண்: 04364-260439

சிக்கல்: நாகையிலிருந்து தஞ்சை சாலையில் 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் கோயில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக